\
வரி குறைப்பு கேட்பது குடிமக்களின் உரிமை; விஜய்க்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் கருத்து

வரி குறைப்பு கேட்பது குடிமக்களின் உரிமை; விஜய்க்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் கருத்து

வரி குறைப்பு கேட்பது குடிமக்களின் உரிமை; விஜய்க்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் கருத்து
Published on

”வரி குறைப்பு கேட்டு முறையிடுவது இந்திய குடிமக்களின் உரிமை. அவர்களை நடிகர் என்று பார்ப்பது தவறு” என்று நடிகர் விஜய்க்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி வசூலிக்க தடைக் கோரியிருந்தார் நடிகர் விஜய். அவரின் கோரிக்கையை நிராகரித்து தள்ளுபடி செய்ததுடன் ரூ.1 லட்சம்அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், இதுகுறித்து காரைக்குடியில் கருத்து தெரிவித்துள்ள கார்த்தி சிதம்பரம், “இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. அவர்களை நடிகர் என்று பார்ப்பது தவறு” என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com