”எனது மகள் திருமணத்தில் முதல்வர் கலந்துகொண்டது மறக்க முடியாத ஆசிர்வாதம்”: இயக்குநர் ஷங்கர்

”எனது மகள் திருமணத்தில் முதல்வர் கலந்துகொண்டது மறக்க முடியாத ஆசிர்வாதம்”: இயக்குநர் ஷங்கர்

”எனது மகள் திருமணத்தில் முதல்வர் கலந்துகொண்டது மறக்க முடியாத ஆசிர்வாதம்”: இயக்குநர் ஷங்கர்
Published on

தனது மகள் திருமணத்தில் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது.

நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இவர்களின் திருமணத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்தினர். மணமக்களை வாழ்த்திய முதல்வர் மரக்கன்றுகளை பரிசளித்து வாழ்த்தினார்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர், முதல்வருக்கும், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து ”மகளின் திருமணத்தில் முதல்வர் கலந்துகொண்டு வாழ்த்தியது மறக்க முடியாத ஆசிர்வாதம்” என்று உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com