“தமிழ்மொழி படங்களில் பணியாற்றுவது மகிழ்ச்சியானது” - ரசூல் பூக்குட்டி

“தமிழ்மொழி படங்களில் பணியாற்றுவது மகிழ்ச்சியானது” - ரசூல் பூக்குட்டி

“தமிழ்மொழி படங்களில் பணியாற்றுவது மகிழ்ச்சியானது” - ரசூல் பூக்குட்டி
Published on

தமிழ் மொழி படங்களில் பணிபுரிவது இப்பொழுதும் மகிழ்ச்சியானது என ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி கூறியுள்ளார்.

ஒத்த செருப்பு படத்திற்கு சிறந்த ஒலிக் கலவைகான தேசிய விருது பெற்ற ரசூல் பூக்குட்டியுடன் நமது டெல்லி செய்தியாளர் நிரஞ்சன் நடத்திய கலந்துரையாடலை இங்கு பார்க்கலாம்.

“தமிழ் மொழி படங்களில் பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மொழியில் நிறைய பெரிய படங்களில் பணியாற்றியிருக்கிறேன். சிறிய படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகன் ஒலிதான் என அனைவரும் கூறினார்கள் அதை நடுவர்கள் மனதில் வைத்து இரண்டாவது முறையாகவும் எனக்கு தேசிய விருது வழங்கி இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

ஒரேயொரு கதாபாத்திரம் ஒரேயொரு இடம் ஒரேயொரு ஆள் என் முகத்தையே பார்வையாளர்கள் படம் முழுவதும் பார்க்க வேண்டும். ஆனால், அதில் அலுப்பு தட்டக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் ஒலி கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது” என்றார் ரசூல் பூக்குட்டி.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com