சினிமா
ஷங்கர் - ராம் சரண் படம் தொடங்கப்படுமா? ஜூலை மாதம் இறுதி முடிவு?
ஷங்கர் - ராம் சரண் படம் தொடங்கப்படுமா? ஜூலை மாதம் இறுதி முடிவு?
இயக்குநர் ஷங்கரும் நடிகர் ராம் சரணும் அடுத்த மாதம் நேரில் சந்தித்து, அடுத்தபடம் குறித்த இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராம் சரணின் 15-வது திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ளதாக சில வாரங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து, இந்தியன்-2 திரைப்படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு எந்தப் படத்தையும் இயக்கக் கூடாது என லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், புதிய படம் குறித்த இறுதி முடிவை எடுக்கும் வகையில், ராம்சரணும், ஷங்கரும் அடுத்தமாதம் சந்திக்கவுள்ளனர். ஒருவேளை சட்ட சிக்கல் ஏற்படுமானால், ஷங்கர் இந்தியன் - 2 படத்தை முடித்துவிட்டே ராம்சரண் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.