\
ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'அனபெல் சேதுபதி'

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'அனபெல் சேதுபதி'

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'அனபெல் சேதுபதி'
Published on
விஜய் சேதுபதியின் 'அனபெல் சேதுபதி' திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான திரைக்கதை அமைப்பைக் கொண்ட, 'அனபெல் சேதுபதி' படத்தில், விஜய் சேதுபதி, தாப்சி இருவரும் இரட்டை வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஹாரர் காமெடி திரைப்படமான 'அனபெல் சேதுபதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு, ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 17-ல் வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன், தீபக் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளிலும் ஒரே நேரத்தில் 'அனபெல் சேதுபதி' வெளியாகவுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com