நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் ஐடி ரெய்டு!

நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் ஐடி ரெய்டு!

நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் ஐடி ரெய்டு!
Published on

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கு காலங்களில் சமூக வலைதளங்கள் வழியாக பலருக்கும் பல உதவிகளைச் செய்து, ரியல் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் நடிகர் சோனு சூட். தவிர, தான் நடத்திவரும் அறக்கட்டளை மூலமாகவும் ஏழைகள், மாணவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்ட பலருக்கும் அவர் உதவிக்கரம் நீட்டி வருகிறார். இந்நிலையில் மும்பையில் இருக்கும் சோனு சூட் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்போது ஆரம்பக்கட்ட சோதனை மட்டும் நடத்தப்பட்டு வருவதால் முழுமையான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் சோனு சூட். இதனையடுத்து டெல்லி மாநில அரசின் புதிதாக கல்வி தொடர்பாக துவக்கியுள்ள திட்டத்திற்கு தூதராக சோனு சூட் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com