இந்த நடிகர் கட்சி ஆரம்பிக்கிறாரா? வலைத்தளங்களில் வைரலான கடிதம்

இந்த நடிகர் கட்சி ஆரம்பிக்கிறாரா? வலைத்தளங்களில் வைரலான கடிதம்

இந்த நடிகர் கட்சி ஆரம்பிக்கிறாரா? வலைத்தளங்களில் வைரலான கடிதம்
Published on

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், கட்சி ஆரம்பிக்கப் போவதாக வந்த தகவலை அடுத்து ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்தவர் தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ். அவரது பேரன், ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அவர், ஆந்திராவில் நவபாரத் தேசிய கட்சி என்ற கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இதற்கான கடிதம் ஒன்றும் உடன் வெளியானது. இது பொய்யான கடிதம் என பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இப்போது ஜெய் லவகுசா என்ற படத்தில் பிசியாக நடித்துவருகிறார். அவருக்கு இப்போது அரசியல் ஆசை ஏதுமில்லை என்று அவர் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com