இசையில் புதுமையோடு புரட்சியும் செய்த ’மேஸ்ட்ரோ’ இளையராஜா! அனைத்து ‘கிட்ஸ்’களுக்கும் அவரே ராஜா!

இன்னிசை உலகின் ராஜாதி ராஜா… இசையில் ஆணிவேர் தொட்ட போதிமரம்.. சோகத்தில் இருக்கும் இதயங்களை ஸ்வரங்களால் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் தேவதூதன்.. இப்படி, எண்ணிலடங்கா சிறப்புகளையும், புகழையும் கொண்ட இசைஞானி இளையராஜாவுக்கு இன்று 81ஆவது பிறந்தநாள்..
இளையராஜா
இளையராஜாpt web

- PUNITHA BALAJI

அத்தனை எளிதாக உருவாகிவிட்டாரா ராஜா?

தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, இன்று உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் இசையாட்சி செய்து கொண்டிருக்கும் இளையராஜா, அத்தனை எளிதாக உருவாகிவிடவில்லை..

பதின் பருவத்திலேயே இசை மீது ஆர்வம் கொண்டிருந்த ராஜாவுக்கு, வீட்டின் வறுமை பள்ளிப் படிப்புக்கு தடையாக நின்றது. கல்வியின் கரம் பற்ற முடியாத இளையராஜாவை, இசை பற்றிக் கொண்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் பாடகராக இருந்த அண்ணன் பாவலர் வரதராஜனோடு தொடங்கியது, ராஜாவின் இசை ராஜாங்கம்.. 1970 காலகட்டத்தில் திரை இசையின் மீது கொண்ட காதலால், தலைநகர் சென்னைக்கு வந்த ராஜா, மேற்கத்திய இசையையும் கர்நாடக சங்கீதத்தையும் கற்றுக் கொண்டார்.

இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய இவருக்கு, 1976ஆம் ஆண்டு கிடைத்தது அன்னக்கிளி பட வாய்ப்பு. ஹிந்தி சினிமா பாடல்கள் தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட அந்த காலத்தில், மச்சான பாத்தீங்களா என மக்களின் மனதைத் தொட்டார், இளையராஜா. தமிழகத்தின் ஒவ்வொரு வீதிகளிலும் ஒலித்த அன்னக்கிளி பட பாடல்கள், ராஜா எனும் ராஜாதி ராஜனின் வருகையை எதிரொலித்தன.

இளையராஜா
'நீங்கலாம் சினிமாவை விட்டு போகக்கூடாதுனு அவர் அழுதார்' - இந்தியன் 2 இசை வெளியீட்டில் கமல் பேச்சு

உணர்வுகளை இசையால் மொழிபெயர்த்தவர்

இப்படித்தான் தொடங்கியது, இளையராஜாவின் ராஜபாட்டை. இதன்பின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொடுத்திருக்கிறார், இளையராஜா.

ராகங்கள் பதினாறில் எத்தனை எத்தனையோ புதுமைகளை செய்து, தனக்கென தனி வரலாறை உருவாக்கியிருக்கிறார், மேஸ்ட்ரோ ராஜா.

காதல், கவலை, கொண்டாட்டம், துயரம், ஏக்கம், விரக்தி என, வாழ்வின் ஒவ்வொரு நிலைகளில் மனிதர்கள் எதிர்கொள்ளும் உணர்வுகளை, தன் இசைக் கருவிகளால் மொழிபெயர்த்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத பிளாக் அண்ட் வொயிட் காலகட்டத்திலேயே, பாடல்களில் அவர் செய்த புதுமையும், இசையில் அவர் செய்த மாயங்களும் வியப்பை தருகின்றன.

திரையிசைப் பாடல்களில் இவர் கொடுத்த நுணுக்கங்கள் எல்லாம் என்றென்றைக்குமான ஆச்சர்யங்கள். படம் வெளிவந்தவுடன் பாடல்கள் மறந்துபோகும் இதே சினிமாவில் 3 தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டவை, ராஜாவின் பாடல்கள்.

இளையராஜா
Garudan review | நியாயமா... விசுவாசமா... கருடனின் வழி எது..?

அனைத்து ‘கிட்ஸ்’களுக்கும் ராஜா

இதற்கு விஜயகாந்தின் ஆட்டோ ராஜா படத்தில் வெளியான சங்கத்தில் பாடாத கவிதை பாடலை உதாரணமாகச் சொல்லலாம். முதலில் மலையாளத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த இந்த பாடல், பின்னர் தமிழில் உருவானது. அதன்பின் தென்னிந்திய மொழிகளில் பாட்டாகி, ஹிந்தியில் அமிதாப் பச்சனின் PAA படத்தில் முக்கிய பாடலாக இடம்பெற்றது.

இளம் இசையமைப்பாளர்களின் வருகைக்கு பிறகு, இசையராஜாவின் வெற்றிப் பயணம் தொய்வடைந்துவிட்டதாக பேச்சுகள் எழத்தொடங்கின. ஆனால், 2012ஆம் ஆண்டு வெளியான, நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் மூலமாக தன் இருப்பை மீண்டும் அறிவித்தார், இளையராஜா. அதில் வெளியான அனைத்து பாடல்களுமே 90ஸ் கிட்ஸ்களின் ரிப்பீட் PLAY LIST.

90s கிட்களுக்கு நீதானே என் பொன் வசந்தம் என்றால், 2K கிட்ஸ்களுக்கு மிஷ்கனின் சைக்கோ படத்தில் வந்த இந்த பாடல்..

இளையராஜா
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 40 | ‘உன்னால் முடியும் தம்பி’ மனோரமா | அண்ணியும் அம்மாதான்!

இசையில் புரட்சி

இப்படி எல்லா காலகட்டத்துக்கும், எல்லா மனநிலைகளுக்குமான பொக்கிஷப் பாடல்கள், இளையராஜாவின் உண்டு. பாடல்களுக்கு மட்டுமல்ல, பின்னணி இசையிலும் ராஜா இன்றும் ராஜா தான். மவுனராகம், ஹேராம், தேவர் மகன், தளபதி, நாயகன், அஞ்சலி, காதலுக்கு மரியாதை, பல க்ளாசிக் திரைப்படங்களில் இவரின் பின்னணி இசை பெரும் பலம் சேர்த்தது. இவ்வரிசையில் இன்னும் ஏராளமான படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்..

இளையராஜா
இளையராஜா

ராஜா இசையில் புதுமை செய்தவர் மட்டுமல்ல, புரட்சியையும் செய்தவர் என்றே கூறலாம். பெரும்பாலும் துக்க நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் ஷெனாய் இசையை, தேவர் மகன் படத்தில், கமல்ஹாசன், ரேவதி திருமணத்துக்கு பின்னணி இசையாக்கி ரசிக்க வைத்திருப்பார், ராஜா. சிறந்த இயக்குநர்கள், மாஸ் ஹீரோக்கள், பிரபல பாடலாசிரியர்கள் என தமிழ் சினிமா மட்டுமல்ல இசைத்துறையின் பெரும் ஆளுமைகளுடன் பணியாற்றிய இளையராஜா, தமிழ் சினிமாவின் அடையாளம்.

தனி இசை சிம்ஃபொனி என இசைத்துறையில் பல சாதனைகள் புரிந்துள்ள ராஜா, இன்றளவும் தனது ராஜ்ஜியத்தில் மன்னனாகவே இருக்கிறார்.

இசைஞானி இளையராஜா பிறந்த தினம் இன்று!
இசைஞானி இளையராஜா பிறந்த தினம் இன்று!

கால ஓட்டத்தில் பல மாற்றங்களைக் காணும் சினிமாவில், எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும், இட்டு நிரப்ப முடியாத தனி இடம், இளையராஜாவுக்கு மட்டுமே சொந்தமானது. தமிழ் திரையிசை உலகை இரண்டாக பிரித்தால், அதில் இளையராஜாவின் இசைதான் காற்று முழுவதும் கலந்திருக்கும். அது என்றென்றைக்கும் ராஜாவின் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com