விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரிய படத்தின் தழுவலா?

விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரிய படத்தின் தழுவலா?
விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரிய படத்தின் தழுவலா?

விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரிய படத்தின் தழுவல் என்று தகவல்கள் வெளியாகி வருன்கிறன.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் வாரத்தில் சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் தொடங்க உள்ளது. இந்தப் படப்பிடிப்பு இந்த மாதம் மூன்றாம் வாரம் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. பொங்கல் பண்டிகைக்குப் பின் விஜய்சேதுபதி இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். அப்போது அவருக்கும் விஜய்க்குமான முதல் காட்சியை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தின் கதை கொரியன் படத்தின் தாக்கத்தால் உருவானது எனத் தெரிய வந்துள்ளது. கொரிய மொழியில் வெளியான ‘சைலன்ஸ்டு’ திரைப்படத்தின் கதையை ஒட்டி இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கொரிய படம் கடந்த 2011 இல் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. இதுவரை வெளியான புரட்சிகர படங்களில் ஒன்றாக இதனை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர் விக்கிபீடியாவில் உள்ள தகவல் அடிப்படையில், ‘சைலன்ஸ்டு’ திரைப்படம் பள்ளி மாணவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு எதிராக போராடும் ஒரு ஆசிரியரின் கதையை பிரதானப்படுத்தி இருந்தது.

இதுவரை கிடைத்துள்ள செய்திகள் அடிப்படையில் விஜய் ‘மாஸ்டர்’ படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் எனத் தெரிகிறது. இவர் சென்னையில் பங்கேற்ற படப்பிடிப்பும் பள்ளி மாணவர்கள் மத்தியிலேயே எடுக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடுள்ள அந்தப் பள்ளியில் நடைபெற்ற படப்பிடிப்பு சம்பந்தமாக சில சர்ச்சைகளும் எழுந்தன.

ஆனால், இந்தப் படம் கொரிய படத்தின் தழுவல் இல்லை என ‘மாஸ்டர்’ படக்குழுவிற்கு நெருக்கமான வட்டத்தினர் மறுத்துள்ளனர். விஜய்க்காகவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் புதியகதையை எழுதினார் என்று அவர்கள் உறுதியாக கூறுகின்றனர். ஆனால் சமூக ஊடகங்களில் இது குறித்த செய்தி வேகமாக பரவி வருகிறது. இந்தச் சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com