ராஷ்மிகாவை கரம்பிடுக்கிறாரா விஜய தேவர்கொண்டா? அடுத்த மாதம் நிச்சயதார்த்தம்?

கீதா கோவிந்தம், டியர் காம்ரெட் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகர் விஜய் தேவர்கொண்டாவும், ராஷ்மிகாவும் அடுத்த மாதம் கரம்பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு விவரங்களை பார்க்கலாம்.
vijay devarakonda and rashmika mandanna
vijay devarakonda and rashmika mandannapt

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற அனிமல் படத்தில் நடித்திருந்தார். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் வசூலையும் வாரிக்குவித்தது. இதனால், ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவதாகவும் கூறப்படுகிறது. அனிமல் பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ராஷ்மிகா இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டவுடன், தங்களுக்கும், விஜய் தேவர்கொண்டாவுக்கும் திருமணமாமே என்று நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

vijay devarakonda and rashmika mandanna
MasterChef India - Tamil: டிவி டூ ஓடிடி... இந்த முறை என்ன ஸ்பெஷல்..?

ஆம், கீதா கோவிந்தம், டியர் காம்ரெட் ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி குறித்து பல ஆண்டுகளாகவே பல கிசுகிசுக்கள் சினிமா வட்டாரங்களில் உலாவி வருகின்றன. மாலத்தீவு சென்றார்கள், தேவர்கொண்டா வீட்டில் தீபாவளி கொண்டாடினார்கள் என்றெல்லாம் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வலம் வருகிறது. புஷ்பா 2, ரெயின்போ, தி கேள் பிரண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும், நிச்சயதார்த்தம் குறித்து வெளியாகியுள்ள தாகவலில் எந்த உண்மையும் இல்லை என்று இருவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலரோ, ராஷ்மிகா மிகவும் ஓபன் டைப். எதுவாக இருந்தாலும் அறிவிப்பார் என்கிறார்கள். இந்த தகவல்படி, இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகப்போகிறது என்று பரவியது வதந்தி மட்டுமே என்பது தெரிகிறது.

vijay devarakonda and rashmika mandanna
பட்டுக்கோட்டை இளம்பெண் ஆணவக்கொலை விவகாரம் - பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com