தளபதி 65’ படத்தை இயக்கவிருக்கும் இளம் இயக்குநர் இவர்தானா?

தளபதி 65’ படத்தை இயக்கவிருக்கும் இளம் இயக்குநர் இவர்தானா?
தளபதி 65’ படத்தை இயக்கவிருக்கும் இளம் இயக்குநர் இவர்தானா?

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ’தளபதி 65’ படத்தினை கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநர் இயக்கவிருக்கிறார்  என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. தர்பார் தோல்வியால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்திற்கு முருகதாஸின் சம்பளத்தைக் குறைக்கச்சொல்லியதால், அப்படத்திலிருந்து விலகியுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். இதனால், தளபதி 65 படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கிலிருந்து விஜய் தற்போது வீட்டில்தான் இருக்கிறார். ஏனென்றால், மாஸ்டர் படத்தின் அனைத்துப் பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்டன. தளபதி 65 படத்தினை மகிழ் திருமேனி, கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்கள் என்ற தகவல்கள் வெளியான நிலையில், அவர்களும் உதயநிதி, விக்ரம் ஆகியோருடன் வெவ்வேறு படங்களை இயக்க ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள்.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 65’ படத்தினை நெல்சன் திலிப்குமார் இயக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும், நெல்சன் சொன்ன நகைச்சுவைக்கொண்ட கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழில் வெற்றியடைந்ததோடு கன்னடத்திலும் ரீமேக் செய்யப்படுகிறது.

தற்போது, நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே, இப்படத்தின் ‘செல்லம்மா’ பாடல் செம்மையான ஹிட் ஆகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com