”கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தேன்; அதற்கு இதுதான் காரணம்” - விஜய் சேதுபதி சொன்ன ’நச்’ விளக்கம்

தமிழில் “லாபம்” என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்த நேரத்தில், தனக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
கீர்த்தி ஷெட்டி - விஜய் சேதுபதி
கீர்த்தி ஷெட்டி - விஜய் சேதுபதி முகநூல்

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான நடிப்பு திறமையால் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பெற்றவர்தான் நடிகர் விஜய் சேதுபதி.

தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இவர் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். ஷாரூக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜவான் படத்திலும் இவரது நடிப்பு பேசப்பட்டது. பார்சி வெப் சீரிஸிலும் இவர் தன்னுடைய அற்புதமான நடிப்பால் பாலிவுட் உலகில் முத்திரை பதித்தார்.

vijay sethupathi, shah rukh khan
vijay sethupathi, shah rukh khanpt web

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் விஜய் சேதுபதி. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகு புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவான 'உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்து விஜய் சேதுபதி மிரட்டி இருந்தார்.

 உப்பெனா
உப்பெனாமுகநூல்

தேசிய விருது பெற்ற உப்பெனாவில் கிருத்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் உப்பெனா படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு தமிழில் லாபம் திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியிருந்தார் விஜய் சேதுபதி. அந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி தனக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது, இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி வேண்டாம் என்று விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

கீர்த்தி ஷெட்டி உடன் நடிக்க மறுத்தது குறித்து பேசியுள்ள விஜய்சேதுபதி, ”நான் தெலுங்கில் உப்பெனா படத்தில் பெபாம்மாவின் அப்பாவாக நடித்தேன். உப்பேனா படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு தமிழில் லாபம் திரைப்படத்தில் ஒப்பந்தமாகினேன். லாபம் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்று படக்குழு என்னிடத்தில் தெரிவித்தனர்.

நான் உடனே படக்குழுவை அழைத்து நான் தெலுங்கில் “உப்பெனா” திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக நடித்திருக்கிறேன். அப்படி இருக்க அதே பெண்ணுடன் எப்படி ரொமான்ஸ் செய்யமுடியும். அவளுக்கு என் மகளின் வயது இருக்கும். கீர்த்தி ஷெட்டியை என் மகளாகவே பார்க்கிறேன்.

எனவே இப்படத்தின் கதாநாயகியாக அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்றேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com