அப்டேட்டுக்கு மேல் அப்டேட்... தளபதி 67 LCU கீழ் வருதா இல்லையா? - வைரலாகும் ட்வீட்!

அப்டேட்டுக்கு மேல் அப்டேட்... தளபதி 67 LCU கீழ் வருதா இல்லையா? - வைரலாகும் ட்வீட்!
அப்டேட்டுக்கு மேல் அப்டேட்... தளபதி 67 LCU கீழ் வருதா இல்லையா? - வைரலாகும் ட்வீட்!

மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்துக்காக விஜய் நடித்து வருகிறார். தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் இசையமைப்பாளர் உட்பட முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டிருந்தது.

இதனிடையே தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் படங்களை உள்ளடக்கிய LCU என்ற லோகி யூனிவெர்ஸில் வருகிறதா என்றெல்லாம் தொடர்ந்து ரசிகர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தளபதி 67 படத்தில் விக்ரம் மற்றும் கைதி படங்களில் இருந்த எந்த நடிகர்களும் இடம்பெறவில்லை என்றும் தளபதி 67 முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டதாக இருப்பதால் இது LCU-க்கு கீழ் வராது என்றும் தகவல்கள் கசிந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏனெனில், விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதியின் குரூப்பில் இருக்கும் நடிகர் சம்பத் ராம் இணையதள சேனலுக்கு கொடுத்த பேட்டியில் “விக்ரம் படத்தில் நடித்த எவருமே தளபதி 67ல் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.” என தெரிவித்திருக்கிறார்.

ஆகவே தளபதி 67 படம் LCU-ன் வேறு தளமாக இருக்கக் கூடும் என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தளபதி 67-ன் வசனகர்த்தாவாக இருக்கும் இயக்குநர் ரத்ன குமார், “மாஸ்டர், விக்ரம் படங்களை அடுத்து 3வது முறையாக நண்பன் லோகேஷுடன் இணைகிறேன்.” என பதிவிட்டுள்ளதோடு, “Thank you Universe" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் Code word accepted என்று பதிவிட்டு வருகிறார்கள்.

எது எப்படியாகினும் படக்குழு தரப்பில் வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பே உறுதியான இறுதியான தகவலாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்படும் இல்லை. ஆனால் தளபதி 67 லோகி சினிமாட்டிக் யூனிவெர்ஸில் வந்தால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களது ஆர்வத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com