\
இன்னொரு மலர் டீச்சரைத் தேடுகிறார் அல்ஃபோன்ஸ் புத்ரன்

இன்னொரு மலர் டீச்சரைத் தேடுகிறார் அல்ஃபோன்ஸ் புத்ரன்

இன்னொரு மலர் டீச்சரைத் தேடுகிறார் அல்ஃபோன்ஸ் புத்ரன்
Published on

தமிழில் நிவின் பாலி, நஸ்ரியா நடித்த ‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். இவர் மலையாளத்தில் இயக்கிய பிரேமம் படம் சூப்பர் ஹிட்டானது. இதிலும் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்தார். மலர் டீச்சர் கேரக்டரில் நடித்திருந்த சாய் பல்லவியின் நடிப்பு இதில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் தனது அடுத்தப் படத்துக்காக இன்னொரு மலர் டீச்சரை தேடுவதாக பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் அல்போன்ஸ் புத்ரன்.

’நன்றாக பாடவும், நடிக்கவும் தெரிந்த கதாநாயகியை தேடுகிறோம். உதவி இயக்குநர்கள் இருவரைத் தேடுகிறோம். அவர்கள் இருவரும் நாங்கள் பேசும் தமிழையும், இங்கிலீஷையும் புரிந்துகொள்பவர்களாக இருக்க வேண்டும். வெறும் ஃபோட்டோ அனுப்பினால் மட்டும் பாட்டு பாடுவது தெரியாது. ஃபோட்டோஷாப் செய்து அனுப்பினாலும் கண்டுபிடித்து விடுவோம்” என்று காமெடியாக தங்க்லீஷில் பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com