’மதராசபட்டினம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரிட்டீஷ் மாடல், எமி ஜாக்சன். தொடர்ந்து, தாண்டவம், தங்க மகன், தெறி என நடித்த இவர், இந்தியிலும் நடித்து வருகிறார்.
இவர் இந்தியில் ’ஏக் தீவானா தா’ என்ற படத்தில் அறிமுகமானபோது அதில் ஹீரோவாக நடித்த பிரதீப் பப்பரை காதலித்தார். அவர் பெயரை பச்சையும் குத்திக்கொண்டார். இந்நிலையில் திடீரென்று அவர்கள் காதல் முறிந்தது.சமீபகாலமாக லண்டன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவருடன் ஒன்றாகச் சுற்றி வருவதாகக் கூறப்பட்டது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக, அவருடன் எமி ஜாக்சன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இப்போது பதிவிட்டுள்ளார். எமி, இந்த தொழிலதிபரைதான் காதலித்து வருகிறார் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஜார்ஜ், லண்டனில் பல ஓட்டல்களை நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.