\
''என் வார்த்தைகள் தடுமாறுகின்றன'' - இர்ஃபான்கான் மகனின் இன்ஸ்டா பதிவு

''என் வார்த்தைகள் தடுமாறுகின்றன'' - இர்ஃபான்கான் மகனின் இன்ஸ்டா பதிவு

''என் வார்த்தைகள் தடுமாறுகின்றன'' - இர்ஃபான்கான் மகனின் இன்ஸ்டா பதிவு
Published on

நியூரோ எண்டாக்ரின் டியூமர் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்த இர்ஃபான் கான், பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

இர்ஃபான் கான் மறைவுக்கு சினிமா ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்த நிலையில் அவரது மறைவு குறித்து இர்ஃபானின் மனைவி, மகன் ஆகியோர் பதிவிட்டுள்ளனர்.

தன் தந்தையின் மறைவு குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்த இர்ஃபானின் மகன் பாபில், எனக்கு அனுதாபங்கள் தெரிவிக்கும் நண்பர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். ஆனால் என்னால் பதிலளிக்க முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் என் வார்த்தைகள் தடுமாறுகின்றன என தெரிவித்துள்ளார்

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இர்ஃபான்கானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவரது மனைவி சுடாபா சிக்தர், நான் இழக்கவில்லை; பல வழிகளிலும் திரும்பப் பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com