ரஜினி பிரஸ் மீட் குறித்து கஸ்தூரியின் மினி பேட்டி...!

ரஜினி பிரஸ் மீட் குறித்து கஸ்தூரியின் மினி பேட்டி...!
ரஜினி பிரஸ் மீட் குறித்து கஸ்தூரியின் மினி பேட்டி...!

நீண்ட நாட்களாகவே ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து தீர்க்கமான முடிவெதையும் சொல்லாமல் சூசகமாகவே கருத்து சொல்லிவிட்டுப் போவார். இன்று சென்னை லீலா பேலஸில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் ஆகும் ஆசை தனக்கு இல்லை. அப்பதவிக்கு இளைஞர்களை முன்னிறுத்துவேன் உள்ளிட்ட சில அறிவிப்புகளை கொடுத்துள்ளார். இது குறித்து நடிகையும் அரசியல் விமர்சகருமான கஸ்தூரியிடம் பேசினோம்...!

இன்றைக்கு ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தது குறித்து என்ன நினைக்கிறீங்க...?

இன்னைக்கு அவர் பத்திரிகையாளர்களை ஏன் சந்திச்சாருனே தெரியல... இது அவசியமே இல்லாத சந்திப்பு. நான் பெரிய எதிர்பார்ப்போட இருந்தேன். ரஜினி நிச்சயம் தன்னோட கட்சிப் பெயரை அறிவிக்கப்போறார்னு. நான் மட்டுமல்ல லட்சக்கணக்கான பேர் எதிர்பார்த்தாங்க. ஆனால் இது பெரிய ஏமாற்றம்தான் எல்லோருக்கும்.

அவர்தான் அரசியலுக்கு நேரடியாக வராவிட்டாலும் இளைஞர்களை முன்னிறுத்துவேன் என்று சொல்லி இருக்கிறாரே...?

ஏங்க அது எப்டி வொர்க் அவுட் ஆகும்...? டேவிஸ் கோப்பை டென்னிஸ்ல தான் Non Playing captainனு ஒரு பதவி உண்டு. அரசியல்னா நேரடியா களத்துல இறங்கனும். நான் கேப்டன் தோனிய நம்புறேன்னு சொன்னா கடைசி பந்துல நெஞ்ச புடிச்சுட்டு நான் இருக்கும்போது சிக்ஸர் அடிச்சு என்னை காப்பாத்தனும் அவர் தான் கேப்டன். அதவிட்டுட்டு நான் சி.எம்.ஆக மாட்டேன் இளைஞர்களை நிறுத்துவேன்னு சொன்னா எப்படி...?

நேரடியாக தான் முதல்வர் வேட்பாளராக நின்னா தோற்றுப்போக வாய்ப்பு இருக்குனு பயப்படுறாரோ...?

ஏன்., ஜெயலலிதா பர்கூர் தொகுதியில நின்னு தோல்வியை சந்திக்கவில்லையா...? வெற்றியோ தோல்வியோ அவர்தான் களத்துக்கு வரணும். உற்சவர் தேர்ல இருந்தாத்தான் மக்கள் தேர இழுப்பாங்க. அவரே சொல்றாரு பாதி ஓட்டு கட்சிக்காக கிடைச்சதுன்னா, பாதி ஓட்டு கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் பாத்து தான் மக்கள் வாக்களிச்சாங்கன்னு., அப்டி சொல்லும் ரஜினியே பிறகு நான் சி.எம்’ஆ நிக்க மாட்டேன்னு சொன்னா எப்படி...?

சிஸ்டம சரி பண்ணாம அரசியலுக்கு வந்தா, அது மீன் குழம்பு பாத்திரத்தில் பொங்கல் வைக்கிற மாதிரினு சொல்றாரே...?

கொஞ்சம் பச்சையாக சொல்லனும்னா இது என்ன லாஜிக்னே புரியல. சாக்கடை நாறுதுனா ஐயோ நாறுது நாறுதுனு சொல்லாம களத்துல இறங்கி சுத்தம் பண்ணணும் இல்லையா...?, பிறகு சிஸ்டம் சரி ஆகட்டும்..., இளைஞர்கள் எழுச்சி அடையட்டும்னா எப்படி..?

அவர் தன்னுடைய அரசியலில் முன்னிறுத்தப்போவதாகச் சொல்லும் இளைஞர்கள் யாராக இருக்கும்...?

அத நினைச்சா தாங்க எனக்கு பயமா இருக்கு., வீட்ல ரெண்டு மருமகன்கள் இருக்காங்க. ஒன்னு தனுஷ்; இன்னொன்னு விசாகன்; அவர் பாட்டுக்கு ரெண்டு பேர்ல ஒருத்தர சொல்லிடப் போறாரு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com