சினிமா
சீனாவில் சர்வதேச திரைப்பட விழா: அமீர்கான் பங்கேற்பு
சீனாவில் சர்வதேச திரைப்பட விழா: அமீர்கான் பங்கேற்பு
சீனாவில் 7வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியுள்ள இந்த திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகர் அமீர் கான் பங்கேற்றுள்ளார்.
சீனா, அமெரிக்கா, செர்பியா, தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.