சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 150 படங்கள்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 150 படங்கள்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 150 படங்கள்
Published on

சென்னையில் நடக்கும் 15-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் 150 படங்கள் திரையிடப்படுகின்றன.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. என்.எஃப்.டி.சி மற்றும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் இணைந்து வழங்கும் இந்த விழாவில் 150 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, ஸ்வீடன், ஐரோப்பா, கொரியா உள்ளிட்ட நாடுகளின் படங்கள் திரையிடப்படுகின்றன. எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் நடித்த 2 படங்களும் திரையிடப்படுகின்றன. 

சென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் சென்டர், ரஷ்ய கலாசார மையம், ஆகிய தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படும்.14-ம் தேதி மாலை 6.1 மணிக்கு கலைவாணர் அரங்கில் துவக்க விழா நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com