"’மாஸ்டர்’ படத்தை மகளுடன் ரசித்துப் பார்த்தேன்; விஜய் நல்ல நடிகர்" - சுரேஷ் ரெய்னா

"’மாஸ்டர்’ படத்தை மகளுடன் ரசித்துப் பார்த்தேன்; விஜய் நல்ல நடிகர்" - சுரேஷ் ரெய்னா

"’மாஸ்டர்’ படத்தை மகளுடன் ரசித்துப் பார்த்தேன்; விஜய் நல்ல நடிகர்" - சுரேஷ் ரெய்னா
Published on

’மாஸ்டர்’ படத்தை தனது மகளுடன் ரசித்துப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் கமெண்டரியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளின்போது “இந்தி டப்பிங்கில் 'மாஸ்டர்' படத்தை எனது மகளுடன் மிகவும் ரசித்துப் பார்த்தேன். அவரது நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. விஜய் நல்ல நடிகர்” என்று குறிப்பிடுள்ளார்.

அதோடு, அதே பேட்டியில், ’தமிழில் பிடித்தப் பாடல் எது?’ என்று கேட்டதற்கு, ’முன்பே வா என் அன்பே வா’ பாடல் பிடிக்கும் என்று கூறிக்கொண்டே பாடிக்காட்டியதோடு சூர்யா தனது ஃபேவரைட் நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னா கூறியதை பார்க்க: https://twitter.com/Tirupathur_VMI/status/1417174928281853955?s=20

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com