தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..!

தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..!

தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..!
Published on

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். தற்போது இவர் சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். சென்னை அணியின் ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஐபிஎல் தொடர்களின் போதும், முக்கிய பண்டிகைகளின் போதும் தமிழில் ட்வீட் செய்வார். இதனால் தமிழக சமூக வலைத்தள வாசிகள் மத்தியில் ஹர்பஜனுக்கு தமிழ்ப் புலவர் உள்ளிட்ட புனைப்பெயர்கள் வழங்கப்பட்டன. 

இவ்வாறு ஹர்பஜன் சிங்கிற்கும் தமிழக ரசிகர்களுக்கான உறவு சென்றுகொண்டிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் நடிப்பதாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சந்தனாம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் ‘டிக்கிலோனா’ படக்குழுவுக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார். 

அத்துடன், “தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com