மீண்டும் தொடங்கியது இந்தியன்-2.. ஷூட்டிங்கில் பங்கேற்ற கமல் ஹாசன்.. வைரலாகும் போட்டோஸ்!

மீண்டும் தொடங்கியது இந்தியன்-2.. ஷூட்டிங்கில் பங்கேற்ற கமல் ஹாசன்.. வைரலாகும் போட்டோஸ்!
மீண்டும் தொடங்கியது இந்தியன்-2.. ஷூட்டிங்கில் பங்கேற்ற கமல் ஹாசன்.. வைரலாகும் போட்டோஸ்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் `இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ல் துவங்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தாலும், அதன் பின் கொரோனா கட்டுப்பாடுகளாலும், இந்தப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான `விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியன் 2 படத்தை துவங்க பேச்சுவார்த்தைகள் நடந்ததது. ஏற்கெனவே படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இன்னும் முக்கியமான பகுதிகள் படமாக்கப்பட வேண்டி இருந்தது. இதில் நடித்த நடிகர் விவேக் இறந்ததால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மீண்டும் படமாக்க வேண்டிய சூழலும் உருவானது. இந்தியன் 2 படப்பிடிப்பு மறுபடி துவங்கும் என ஆகஸ்ட் 24ம் தேதி ட்வீட் செய்திருந்தார் நடிகர் கமல்ஹாசன்.

அதன்படி இந்த மாத துவக்கத்தில் படப்பிடிப்பு துவங்கியது. கமல்ஹாசன் இல்லாத காட்சிகளும் படமாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் இணைந்திருக்கிறார். இந்தப் படப்பிடிப்புக்கு என சென்னை பிரசாத் லேபில் அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு ஷூட்டிங் பணிகள் நடத்தி வருகின்றனர். இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்ட புகைப்படத்தையும் வீடியோவையும் அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் லைக்கா புரொடக்ஷனும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகூல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com