\
இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் ஜூன் 22 ரிலீஸ்

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் ஜூன் 22 ரிலீஸ்

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் ஜூன் 22 ரிலீஸ்
Published on

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் டிக் டிக் டிக் திரைப்படம் வரும் ஜூன் 22ம் தேதி வெளியாகவுள்ளது. 

மிருதன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சக்தி செளந்திரராஜனும் ஜெயம் ரவியும் இணைந்திருக்கும் இந்த படத்தில் விண்வெளி கதையை படமாக்கியுள்ளனர். இதன் மூலம் இந்திய சினிமாவில் முதன் முறையாக விண்வெளி கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெயர் டிக் டிக் டிக் படத்திற்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ஜனவரி 26ம் தேதியன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். ஆனால், ஒரு சில காரணத்தால் அந்த தேதியில் வெளியாகவில்லை.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வேலை நிறுத்தம் தொடங்கியதால் டிக் டிக் டிக் படத்தை ரிலீஸ் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கத்தின், திரைப்பட வெளியீடு ஒழுங்குபடுத்தல் குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் படத்தை விநியோகம் செய்யும் வேலைகளில் தயாரிப்பாளர் இறங்கியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com