“இந்தியா காப்பாற்றப்பட்டு விட்டது; தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும்”- கஸ்தூரி ராஜா

“இந்தியா காப்பாற்றப்பட்டு விட்டது; தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும்”- கஸ்தூரி ராஜா
“இந்தியா காப்பாற்றப்பட்டு விட்டது; தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும்”- கஸ்தூரி ராஜா

இந்தியா காப்பாற்றப்பட்டு விட்டது; தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும் என இயக்குநர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் தனியார் மையம் சார்பில் பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்ட குறும்பட போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.  பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியல் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய கஸ்தூரி ராஜா, “ இந்து என்பது என் அடையாளம். கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவம் என்பது அடையாளம்; இஸ்லாமியர்களுக்கு இஸ்லாம் அடையாளம். நான் அயோத்தியாவில் நிற்பது போல் நினைக்கிறேன்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த் போல் நடிகர்களுக்கு அளிக்கப்படும் உற்சாகம், வரவேற்பு பிரதமர் மோடிக்கு அளிக்கப்படுகிறது. சீனா போன்ற வெளிநாட்டில் நம் பிரதமருக்கு சிவப்புக் கம்பளம் வரவேற்பு அளிக்கப்படுகிறது, நம் தேசிய கீதம் இசைக்கப்படுவதை பார்த்தால் சிலிர்க்கிறது. பிரதமர் மோடி வெளிநாடுகளில் ஹீரோ போல ஜொலித்துக் கொண்டிருக்கிறார். உலக நாடுகள் முதல் பெயராக இந்தியாவை சொல்கிறது. எந்த விவகாரத்திலும் இந்தியாவை அசைக்க முடியாது என்ற நிலையை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்.

சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் நாடு சுரண்டப்பட்ட நிலையில், இப்போது தான் விடியல் வந்துள்ளது. இந்தியா காப்பாற்றப்பட்டு விட்டது, தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும்.” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com