\
நடிகர் விஜய் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு

நடிகர் விஜய் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு

நடிகர் விஜய் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு
Published on

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

பிகில் பட விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 4 நாட்கள் சோதனை நடத்தினர். அப்போது அன்புச்செழியன் விடு, அலுவலகங்களிலிருந்து 77 கோடி ரூபாய் பணம், 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் விஜய் வீட்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.

இதையடுத்து நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, பைனான்சியர் அன்புசெழியனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். விஜய் சார்பில் அவரது ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜரானார்.

இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியில் உள்ள மாஸ்டர் படத்தின் இணைத்தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com