\
"எனது சினிமா பயணத்தில் முக்கியமான படம்" – 'தலைவி' குறித்து அரவிந்த்சாமி மகிழ்ச்சி

"எனது சினிமா பயணத்தில் முக்கியமான படம்" – 'தலைவி' குறித்து அரவிந்த்சாமி மகிழ்ச்சி

"எனது சினிமா பயணத்தில் முக்கியமான படம்" – 'தலைவி' குறித்து அரவிந்த்சாமி மகிழ்ச்சி
Published on

தலைவி திரைப்படம் தன்னுடைய சினிமா பயணத்தில் முக்கியமான திரைப்படமாக இருக்கும் என நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார். 

தலைவி திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆக அரவிந்த்சாமி நடித்துள்ளார். அவரின் முக அமைப்பு, உடல் பாவனை, சிகை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தத்ரூபமாக கொண்டுவர இவர் கடுமையாக உழைத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தலைவி திரைப்படம் குறித்து பேசிய அவர், இது தன்னுடைய திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் திரைப்படமாக இருக்குமென கூறினர். 

அத்துடன் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர் எனவும் அரவிந்த்சாமி பாராட்டினார். சமீபத்தில் தலைவி படத்தை பார்த்ததாகவும்,  அவர்கள் நடிப்பை பார்க்கும் பொழுது தன்னுடைய கதாபாத்திரம் சிறியதாக இருக்கும் வகையில் தனக்கு தோன்றியதாகவும் பாராட்டிப் பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com