சினிமா
“இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்”- இளையராஜா
“இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்”- இளையராஜா
இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 76ஆவது பிறந்த நாளைகொண்டாடுகிறார். இந்நிலையில் சாலிகிராமத்தில் குவிந்த இசை ரசிகர்கள் இளையராஜாவுக்கு சால்வை அணிவித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அப்போது இளையராஜா தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இசைஞானி, வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.