\
இசைஞானி இளையராஜா உடன் முதன்முறையாக கைகோக்கும் வெற்றிமாறன் -படம் எது தெரியுமா?

இசைஞானி இளையராஜா உடன் முதன்முறையாக கைகோக்கும் வெற்றிமாறன் -படம் எது தெரியுமா?

இசைஞானி இளையராஜா உடன் முதன்முறையாக கைகோக்கும் வெற்றிமாறன் -படம் எது தெரியுமா?
Published on

தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் மாதிரியான படைப்புகள் மூலம் பரவலாக உலகம் முழுவதும் அறையப்படுபவர். தற்போது சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்திற்கான பணிகளை வெற்றிமாறன் மேற்கொண்டு வருகிறார்.

விரைவில் காமெடி நடிகர் சூரியை கதையின் நாயகனாக கொண்டு படம் ஒன்றினை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த படத்திற்கு மியூசிக் மேஸ்ட்ரோ இளையராஜா இசை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தொடங்குகிறதாம். வெற்றிமாறன் பெரும்பாலும் ஜிவி பிரகாஷ்குமார் உடன் கூட்டணி அமைத்தேன் படங்களை கொடுத்து வந்தார். வடசென்னைக்கு மட்டும் சந்தோஷ் நாராயணன் உடன் கூட்டணி அமைத்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com