\
எஸ்.பி.பி-க்காக மட்டும் நோட்டீஸ் அல்ல: இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் விளக்கம்

எஸ்.பி.பி-க்காக மட்டும் நோட்டீஸ் அல்ல: இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் விளக்கம்

எஸ்.பி.பி-க்காக மட்டும் நோட்டீஸ் அல்ல: இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் விளக்கம்
Published on: 

இசையமைத்த பாடலுக்கு காப்புரிமை கோருவதில் எந்த தவறும் இல்லை என இசையமைப்பாளர் இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது கேள்வி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான கேள்வியாக பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமை பணியை தொடர்கிறோம். இது எஸ்.பி.பி-க்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல. உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என கூறுகிறோம். கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால் சிலர் வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com