சினிமா
'என்னதான் இன்னும் உண்டு கூறு...' - ட்வீட்டில் பாடிய இளையராஜா
'என்னதான் இன்னும் உண்டு கூறு...' - ட்வீட்டில் பாடிய இளையராஜா
அம்பேத்கருடன் - பிரதமர் மோடியை ஒப்பிட்டு கருத்து கூறிய விவகாரத்தில் எதிர்வினைகள் ஓய்ந்த நிலையில், நான் உன்னை நீங்க மாட்டேன் என்ற பாடலை தனது குரலில் பாடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இளையராஜா.
தளபதி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில் சில வரிகளை மாற்றம் செய்து, பாடுவேன் உனக்காகவே. இந்த நாள் நன்னாள் என்று பாடு. என்னதான் இன்னும் உண்டு கூறு. என்று பாடியிருக்கிறார். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் எனவும் புத்தகம் ஒன்றுக்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த பாடல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்கலாம்: 'பான் மசாலா' விளம்பரத்தில் நடித்த அக்சய் குமார் - கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

