\
கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பு கொடுத்த இளையராஜா!

கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பு கொடுத்த இளையராஜா!

கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பு கொடுத்த இளையராஜா!
Published on

தன்னிடம் வாய்ப்பு கேட்ட 9 கல்லூரி மாணவிகளுக்கு சினிமாவில் பாட வாய்ப்பளித்துள்ளார் இசை அமைப்பாளர் இளையராஜா.
 
இளையராஜாவின் 75 பிறந்த தினத்தை சில கல்லூரிகளில் விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். சமீபத்தில் ராணி மேரி கல்லூரியிலும், எத்திராஜ் கல்லூரியிலும் நடைபெற்ற விழாவில் இளையாராஜா பங்கேற்று தன் அனுபவங்களைக் கூறினார். அவர் முன் பல மாணவிகள் பாடல் பாடி அசத்தினர். அவர்கள், தங்களால் சினிமாவில் பாட முடியுமா? என்று கேட்டிருந்தனர்.

அவர்கள் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட இளையராஜா, அதில் சில மாணவிகளை தேர்வு செய்து, ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு வர வழைத்தார். அதில், 9 மாணவிகளை தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்திருந்தார். 

அதன்படி, விஜய் ஆண்டனி நடிக்கும் ’தமிழரசன்’ படத்தில் அந்த மாணவிகளுக்கு பாட வாய்ப்பளித்துள்ளார். இந்தப் படத்தை பாபு யோகேஸ் வரன் இயக்குகிறார். இவர் ஜெயம் ரவி நடித்த ’தாஸ்’ படத்தை இயக்கியவர். ’தமிழரசன்’ படத்தை எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com