விஜய்சேதுபதியின் படத்தில் இசைஞானி இளையராஜா, யுவன்சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.
விஜய்சேதுபதி நடிப்பில், சீனுராமசாமி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தை யுவன்சங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
இந்தப்படம் தொடர்பாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ள யுவன்சங்கர் ராஜா, தங்களுடைய அடுத்த படமான ‘மாமனிதன்’ படத்தில், இளையாராஜாவுடன், தானும், சகோதரர் கார்த்திக் ராஜாவும் இணைந்து இசையமைக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் பெருமையுடன் இதை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான ‘மாமனிதன்’ படத்தில் விஜய்சேதுபதி நடிக்க, சீனுராமி இயக்கத்திற்கு இந்த இசை அமைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.