\
”இளையராஜா, கங்கை அமரன் இணைந்ததைப் பார்த்து நெகிழ்கிறோம்” - தங்கர் பச்சான்

”இளையராஜா, கங்கை அமரன் இணைந்ததைப் பார்த்து நெகிழ்கிறோம்” - தங்கர் பச்சான்

”இளையராஜா, கங்கை அமரன் இணைந்ததைப் பார்த்து நெகிழ்கிறோம்” - தங்கர் பச்சான்
Published on

இளையராஜாவும் கங்கை அமரனும் இணைந்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான்.

கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக பேசாமல் இருந்து வந்த இசையமைப்பாளர் இளையராஜாவும் அவரது தம்பி கங்கை அமரனும் சந்தித்துக்கொண்டு பாசத்தை வெளிப்படுத்திய அழகான புகைப்படங்களை இயக்குநர் வெங்கட் பிரபு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இருவரும் இணைந்த புகைப்படத்தைப் பகிர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், இயக்குநர் தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஒரே வயிற்றில் பிறந்து,ஒன்றாகவே வளர்ந்து,இன்ப துன்பங்களை அனுபவித்து,காலம் ஏற்படுத்திய பிரிவில் கடந்த காலங்களை எண்ணி எண்ணி ஏக்கங்களோடு தனிமையில் தத்தளித்து ஒன்று சேர்ந்தப்பின் அங்கே சொற்களுக்கு இடமேது. இதனைக்கண்டு, எனைப்போன்ற இலட்சக்கணக்கிலான அண்ணன் தம்பிகளும் நெகிழ்கின்றோம்” என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com