\
கடைசி விவசாயி படக்குழு மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார்?

கடைசி விவசாயி படக்குழு மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார்?

கடைசி விவசாயி படக்குழு மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார்?
Published on

கடைசி விவசாயி படக்குழு மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காக்கா முட்டை திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர் மணிகண்டன். தொடர்ந்து கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை இயக்கினார். அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கியிருக்கும் படம் 'கடைசி விவசாயி'. இந்தப் படத்தை சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சி நடந்தது.

பல்வேறு காரணங்களுக்காக படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டது. இளையராஜாவின் பின்னணி இசையை நீக்கிவிட்டு வேறு ஆளை வைத்து புதிதாக பின்னணி இசையமைக்க வைத்திருக்கிறார் மணிகண்டன். அதற்காக கூடுதல் செலவும் ஆகியிருக்கிறது. இந்நிலையில் தனக்கு தெரிவிக்காமலேயே படத்தில் இருந்து பின்னணி இசையை நீக்கிவிட்டார்கள் என இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com