\
திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற முடிவெடுத்தால் எங்கள் மண்டபத்தை தருகிறோம்- வைரமுத்து

திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற முடிவெடுத்தால் எங்கள் மண்டபத்தை தருகிறோம்- வைரமுத்து

திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற முடிவெடுத்தால் எங்கள் மண்டபத்தை தருகிறோம்- வைரமுத்து
Published on

”திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்தால் எங்கள் திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்” என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. படுக்கை வசதி, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற காரணங்களால் நோயாளிகள் அவதியுற்று வருகிறார்கள். கொரோனா பாதித்த மஹாராஷ்டிராவில், கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 5 ஸ்டார் விடுதிகள், திருமண மணபடங்களை கொரோனா சிறப்பு மையங்களாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள் 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம். மணம் நிகழ்வதைவிட குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com