அவர்களை இறைவன் கண்டிப்பாக தண்டிப்பான்: ஹன்சிகா நம்பிக்கை!
நடிகைகளின் அந்தரங்கப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பி வருகிறது. எமி ஜாக்சன், அக்ஷரா ஹாசன் ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியான நிலையில் ஹன்சிகாவின் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, ’’எனது ஃபோன் மற்றும் டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதை மீட்கும் முயற்சியில் எனது டீம் ஈடுபட்டுள்ளது’’ என்று தெரிவித்தார் ஹன்சிகா.
இந்நிலையில் இது எப்படி நிகழ்ந்தது என்று அவர் விளக்கும்போது, ’’சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன். அப்போதிருந்தே என் மொபைல்ஃபோன் பிரச்னையில் சிக்கிக்கொண்டது. இந்நிலையில் சமீபத்தில் என் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி அதிர்ச்சியடைய வைத்தன. அந்தப் புகைப்படங்கள் நான்கு வருடத்துக்கு முன் எடுக்கப்பட்டது. அதை ஹேக் செய்து யாரோ திடுட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர். இதுபற்றி என் டெக்னிக்கல் டீமிடம் தெரிவித்தேன். அவர்கள் அதை மீட்டுக் கொடுத்தனர்.
கவனத்தை ஈர்ப்பதற்காக, இந்த புகைப்படங்களை நானே லீக் செய்ததாக சிலர் சமூக வலைத்தளங்களில் என்னை டிரோல் செய்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சில கருத்துகள் காயப்படுத்துவதாகவும் இருந்தது. இது மனசாட்சி இல்லாதவர் களின் செயல். அதோடு எனக்கு ஆதரவாகவும் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது எனக்கு ஒரு பாடம். எனது போனை யும் ட்விட்டர் கணக்கையும் ஹேக் செய்தவர்கள் யார் என்பது பற்றி 20 பேர் கொண்ட டெக்னிக்கல் டீம் கண்டுபிடித்து வரு கிறார்கள். ஹேக் செய்தவர்களை, இறைவன் கண்டிப்பாகத் தண்டிப்பான்’’ என்றார்.