\
ரஜினிகாந்த் உடன் இணைந்து புதிய படமா? - வைரலாகும் தகவல்கள்; போனி கபூர் வெளியிட்ட அறிக்கை

ரஜினிகாந்த் உடன் இணைந்து புதிய படமா? - வைரலாகும் தகவல்கள்; போனி கபூர் வெளியிட்ட அறிக்கை

ரஜினிகாந்த் உடன் இணைந்து புதிய படமா? - வைரலாகும் தகவல்கள்; போனி கபூர் வெளியிட்ட அறிக்கை
Published on: 

இந்திய சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான வலிமை வரும் வியாழன் அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவரது தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. 

 தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள 169-வது திரைப்படத்திற்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் 170-வது படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் போனி கபூர். அதுகுறித்து ட்விட்டர் பக்கத்திலும் அவர் ட்வீட் செய்துள்ளார். 

“நானும் ரஜினிகாந்தும் நெடு நாள் நண்பர்கள். நானும் அவரும் அவ்வப்போது சந்திப்பதும் உண்டு. அந்த சந்திப்பின் போது எங்களது ஐடியாக்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதும் உண்டு. நானும் இணைந்து பணியாற்றினால் அதனை நிச்சயம் முதல் ஆளாக நானே தெரிவிப்பேன். இது மாதிரியான தகவல்கள் ஏதும் கசியாது” என தெரிவித்துள்ளார் அவர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com