\
கோலிவுட்டில் நடிக்க விரும்புகிறேன்: வித்யாபாலன் பேட்டி

கோலிவுட்டில் நடிக்க விரும்புகிறேன்: வித்யாபாலன் பேட்டி

கோலிவுட்டில் நடிக்க விரும்புகிறேன்: வித்யாபாலன் பேட்டி
Published on

கோலிவுட்டில் நடிக்க விரும்புவதாக நடிகை வித்யாபாலன் தெரிவித்திருக்கிறார். 

பாலிவுட் நடிகைகளில் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் வித்யாபாலன். ஓம் சாந்தி ஓம், தி டர்டி பிக்சர் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தவர். ப்லிம்ஃபேர் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளை பெற்றவர். வித்யா பாலிவுட்டில் இருந்தாலும் அவரது பூர்வீகம் தென்னிந்தியா. பாலக்காட்டில் பிறந்து வளர்ந்த அவருக்கு தமிழ்நாட்டுடனும் நெருங்கிய உறவு உண்டு. 
சமீபத்தில் நடந்த புடவை விழாவை திறந்து வைப்பதற்காக அவர் சென்னை வந்திருந்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு சென்னை திரும்பிய அவர் தன்னுடைய அப்பாவின் தங்கை வீடு சென்னையில்தான் இருந்தது என்றும் சிறுவயதில் சென்னைக்கு வந்த போது மெரினா கடற்கரையை பார்த்து ரசித்தாகவும் அப்போது தனக்கு எட்டு வயது என்றும் கூறி தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

ஆரம்பத்தில் வித்யா தமிழில்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது. அவரிடம் தமிழில் எப்போது நடிக்க இருக்கிறீர்கள் என கேட்டதற்கு, நல்ல கதை எனக்கு கிடைத்தால் கோலிவுட்டில் நடிக்க நான் மகிழ்ச்சியாக வந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com