மீராமிதுன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீ குளிப்பேன் -ஜோதிகாவின் ரசிகை ஆவேசம்!

மீராமிதுன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீ குளிப்பேன் -ஜோதிகாவின் ரசிகை ஆவேசம்!
மீராமிதுன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீ குளிப்பேன் -ஜோதிகாவின் ரசிகை ஆவேசம்!

சென்னை அம்பத்தூரில் உள்ள காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீராமிதுன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


சமூக வலைதளத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை தரக்குறைவாக பேசிய மீராமிதுனை கடுமையாக கண்டித்து அவர்களது ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர். இதையடுத்து மீராமிதுன் நடிகர் விஜயின் மனைவி மற்றும் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகாவையும் மிகவும் தரக்குறைவாக பேசியிருந்தார்.


இதனை கண்டித்து அவர்களது ரசிகர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் மீராமிதுன் மீது புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று மீராமிதுன் ஜோதிகாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருநிறையூர் ஞானப்பன் நகரில் வசிக்கும் மோகன் என்பவரின் மனைவி ஸ்ரீமதி அம்பத்தூர் காவல் இணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.


அந்த மனுவில் நான் சூர்யா ஜோதிகாவின் தீவிர ரசிகை. நானும் என்னைப்போன்ற பல பெண்களும் அவரை முன்னுதாரணமாக வைத்து வாழ்ந்து வருகிறோம். ஜோதிகாவும் சூர்யாவும் அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாடல்அழகி மீராமிதுன் என்பவர் ஜோதிகா மற்றும் சூர்யாவை சமூக வலைதளங்களில் மிகவும் கேவலமாக பேசியுள்ளார்.
இதைப் பார்த்து நானும் அவரது ரசிகர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே ஜோதிகாவை தரக்குறைவாக பேசிய மீராமிதுன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு ஜோதிகாவிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீமதி மீராமிதும் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீ குளிப்பேன் என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com