நான் ஆதித்யா பாஸ்கரை காதலிக்கிறேனா? விளக்கமளித்த ‘96’ கெளரி

நான் ஆதித்யா பாஸ்கரை காதலிக்கிறேனா? விளக்கமளித்த ‘96’ கெளரி

நான் ஆதித்யா பாஸ்கரை காதலிக்கிறேனா? விளக்கமளித்த ‘96’ கெளரி
Published on

தன்னுடன் நடித்த ஆதித்யா பாஸ்கரை தான் காதலிக்கவில்லை என 96 படத்தில் நடித்த கெளரி விளக்கம் அளித்துள்ளார்

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள திரைப்படம் 96. பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்துக்கு பல தரப்பும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். படத்தில் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். அதேபோல் அவர்களின் பள்ளிப்பருவகால கதாபாத்திரங்களில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கெளரி நடித்துள்ளனர். விஜய் சேதுபதி த்ரிஷா ஜோடிக்கு இணையாக இவர்களின் ஜோடியும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதித்யா பாஸ்கரும், கெளரியும் உண்மையிலேயே காதலர்கள் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலாகி பரவத்தொடங்கின.

இதற்கு விளக்கம் அளித்துள்ள கெளரி, “ஆதித்யா பாஸ்கரும், நானும் காதலிக்கவில்லை. படத்திற்காக ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் திரையில் மட்டுமே காதலர்களாக நடித்தோம். நிஜத்தில் அல்ல. பொய் செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள். கண்ணியம் காட்டுங்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரில் நிறைய போலி கணக்குகள் சமூக வலைதளங்களில் தொடங்கப்படுவதாகவும், உண்மையான கணக்குகளை பின் தொடர்ந்து போலி செய்திகள் பரவுவதை தடுக்க உதவ வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com