சைவம் என்றாலே நாலு அடி தள்ளி நிற்பேன்: ராணா லகலக..!
சைவம் என்றாலே நாலு தள்ளி நிற்பேன் என்று ‘பாகுபலி’ ராணா கூறியுள்ளார்.
‘பாகுபலி’ பல்வாள்தேவன் கேரக்டர் மூலம் சினிமா ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் ராணா. இவர் நடித்திருக்கும் ‘நேனே ராஜூ.. நேனே மந்திரி’ படம் தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் தமிழில் வரும் 22-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அவர் ஹைதராபாத்தில் செட்டில் ஆன பிற்பாடு தெலுங்கு பட உலகில் நடிக்க தொடங்கி குறிப்பிடும்படியான நடிகரானார். கட்டுமஸ்தான உடல், வாட்டச்சாட்டமான உயரம் என உயர்ந்த நடிகராக வலம் வரும் அவரிடம் சைவம் பிடிக்குமா? அசைவம் பிடிக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராணா, “சைவம் என்றாலே நாலு அடி தள்ளி நிற்கின்ற ஆள் நான். எனக்குப் பிடித்தது அசைவம்தான். ஹைதராபாத் பிரியாணியின் ப்ரியர் நான். அந்த ருசியை அடித்து கொள்ளவே முடியாது. ஆம்! நான் விதவிதமான பிரியாணிக்கு ரசிகன். தம் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி என எந்த பிரியாணியாக இருந்தாலும் செம கட்டு கட்டுவேன். காரசாரமான உணவு வகைகள் என்றால் எனக்கு பிடிக்கும். அதில் கிடைக்கும் திருப்தியே தனி. ‘நான் ஆணையிட்டால்’ படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது. அந்த ஊரின் வகைவகையான உணவுகளை ருசித்த பிறகு அதற்கு என் நாக்கு அடிமையாகிவிட்டது” என்று கூறினார்.