\
''தனுஷ் ஒரு சிட்டி ரோபோ போல'' - வியந்து பாராட்டும் நடிகை சஞ்சனா நடராஜன்!!

''தனுஷ் ஒரு சிட்டி ரோபோ போல'' - வியந்து பாராட்டும் நடிகை சஞ்சனா நடராஜன்!!

''தனுஷ் ஒரு சிட்டி ரோபோ போல'' - வியந்து பாராட்டும் நடிகை சஞ்சனா நடராஜன்!!
Published on

திரையுலகில் அறிமுகமாகி ஆறு ஆண்டுகளைக் கடந்தாலும் அவரது கணக்கில் சில படங்கள் மட்டுமே உள்ளன. நடிகை சஞ்சனா நடராசன் கவலைப்படவில்லை. மாடலிங் உலகில் இருந்துவந்த இந்த நடிகை உற்சாகமாகத்தான் இருக்கிறார்.

“என் பயணத்தை மதிப்புள்ளதாகவே உணர்கிறேன். நான் வேறு பாதையில் சென்றிருந்தால், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் போன்றவர்களுடன் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்திருக்காது” என்று கூறும் சஞ்சனா, ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அண்மையில் வெளியான ரகிட ரகிட ரகிட என்ற பாடல் காட்சியில் ரசிகர்கள் அவரது நடிப்பைப் பார்த்து ரசித்தார்கள்.   

“வெவ்வேறு படங்களுக்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அலுவலகத்துக்கு பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவர்களுடைய ஒரு வெப்சீரிஸில் நடிக்க அழைக்கப்பட்டேன். அப்போது ஜகமே தந்திரம் படத்திற்கு ஒருவரைத் தேடுகிறார்கள் என்று அறிந்தேன். நான் பணிபுரிந்த படக்குழு நண்பர்கள் என் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார்கள். எதை விரும்பினேனோ அதைபோன்ற ஒரு வாய்ப்பு. அந்த கேரக்டர் மிகவும் வித்தியாசமானது. கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். இது கார்த்திக் சுப்புராஜ் – தனுஷ் படம். இந்த நினைவை நான் எப்போதும் வைத்திருப்பேன்” என்று நெகிழ்கிறார் சஞ்சனா.

முதல் நாள் படப்படிப்பில் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். தனுஷ் என்னை சகஜமாக இருக்கவைத்தார் என்று குறிப்பிடும் சஞ்சனா, “அவருடைய நடிப்பை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தேன். முதல் டேக்கில் இருந்து மூன்றாவது டேக் வரைக்கும் அதே எனர்ஜியுடன் இருக்கிறார் தனுஷ். அவர் சிட்டி ரோபோ போல எளிதில் உள்வாங்கிவிடுகிறார்” என்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com