‘ அமைதி மற்றும் உண்மையின் பக்கம் நிற்கும் நாடு இந்தியா’ -ஷாருக்கான்
இந்திய நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவர்களது வாழ்த்து செய்திகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த சூழலில் பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் ‘என்றென்றும் ஒரு உண்மையான இந்தியனாகவே இருப்பேன்’ என்று உறுதிமொழி ஏற்று நாட்டு மக்களுக்கும், தன் ரசிகர்களுக்கும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசத்தின் மீதான தனது அன்பை வெளிப்படுத்த இந்திய தேசியக் கொடியின் மூவர்ண கொடி கொண்ட பின்னணியில் ஸ்டைலாக அவரது டிரேட்மார்க் போஸை கொடுத்து தனது வாழ்த்தை அவர் தெரிவித்துள்ளார்.
“வலிமை மற்றும் தைரியம், அமைதி மற்றும் உண்மை, வளர்ச்சி என மனித வாழ்க்கைக்கும் அவசியமான மதிப்புகளுக்கு மரியாதை கொடுக்கும் நாடகா நம் இந்தியா திகழ்கிறது. அதற்கு மதிப்பு கொடுத்து என்றென்றும் நான் இருப்பேன்.
உண்மையான இந்தியராக இருப்பதற்கான வழிகாட்டுதல்கள் இந்தியக் கொடியின் மூவர்ணங்களிலேயே வகுத்துள்ளன. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்” என அவர் ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலினால் தனது குடும்பத்தினருடன் வீட்டில் நேரத்தை ஷாருக் செலவிட்டு வருகிறார்.