ஹாலிவுட் மேக் அப் மேனுக்கு உதவியாளராக இருந்த கமல் - ஒரு சுவாரசிய தகவல்

ஹாலிவுட் மேக் அப் மேனுக்கு உதவியாளராக இருந்த கமல் - ஒரு சுவாரசிய தகவல்
ஹாலிவுட் மேக் அப் மேனுக்கு உதவியாளராக இருந்த கமல் - ஒரு சுவாரசிய தகவல்


நடிகர் கமல்ஹாசனின் மேக்அப் உலகம் பற்றி ஹாலிவுட் நடிகையின் ட்விட்டர் பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


நடிகர் கமல்ஹாசனுக்கு அதிக அறிமுகங்கள் தேவையில்லை. முன்பு நடிகர், இப்போது அவர் அரசியல் கட்சியின் தலைவர். ஒரு நடிகனாக, பாடகராக, இயக்குநராக என அனைத்து தளங்களிலும் சிறந்து விளங்குபவர் கமல். அவர் மேக்அப் கலையிலும் வல்லவர் என்பது மிகச் சிலருக்கே தெரிந்த விஷயம். அந்த வகையில் கமல்ஹாசனின் மேக்அப் உலகம் பற்றி தற்போது ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டரில் ஒருவர் கமல்ஹாசனின் மேக் அப் உலகம் பற்றி ஒரு தகவலைப் பதிவிட்டார். அதில் “ கமல்ஹாசன் ஸ்டார் ட்ரெக் என்ற ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருது வென்ற மேக்அப் கலைஞர் மைக்கல் வெஸ்ட்மோர் என்பவரிடம் 30 நாட்கள் உதவியாளராக பணிபுரிந்தார்” எனப் பதிவிட்டார்.

இந்தப் பதிவைப் பார்த்த மைக்கலின் மகளும், நடிகையுமான மெக்கன்சி வெஸ்மோர் கமலுடனான பழைய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் அப்பொழுது குழந்தையாக இருந்தேன். கமல் எங்கள் வீட்டுக்கு வரும் போது எல்லாம் இந்தியாவிலிருந்து அழகனா பரிசுகளை வாங்கிவருவார். நான் எப்பொழுதும் அவரை ஒரு பிரமிப்புடனே பார்ப்பேன். அவரை அவரது இல்லத்தில் சந்திப்பது என்பது ஒரு கனவாகவே இருந்தது.” எனக் கூறியுள்ளார்.

மேலும் விஸ்வரூபம் படத்தின் போது கமலுடன் எடுத்த புகைப்படத்தையும், சிறிய வயதில் தான் தந்தையுடன் இருந்த புகைப்படத்தைப் பதிவிட்ட அவர் “நான் சிறு வயதாக இருக்கும் போது கமலுக்கான மேக் அப்புகளை எனது தந்தையே உருவாக்குவார். நாங்கள் தொடர்பில்தான் இருந்தோம் ஆனால் தற்போது கமலை சந்தித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இரண்டாவது புகைப்படம், சிறு வயதில் கமல் எனக்காக வாங்கி வந்த ஆடையை அணிந்து கொண்டு எனது தந்தையோடு நிற்கிறேன்.” என மேலும் விளக்கியுள்ளார்.

1985 ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ்க் படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற மைக்கலுடன், நடிகர் கமல்ஹாசன் இந்தியன் மற்றும் அவ்வை சண்முகி ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com