இன ரீதியான சோதனை நிறுத்தப்பட வேண்டும்: சந்தோஷ் நாராயணன்
சிட்னி விமான நிலையத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தொடர்ந்து 8வது முறையாக ரசாயன பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அட்டக்கத்தி மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன். பிறகு பீட்ஸா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, இறுதிச்சுற்று, கபாலி, பைரவா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். இவரது ‘வர்லாம் வா பைரவா’பாடல் பாலிவுட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் சந்தோஷுக்கு தனி அடையாளம் இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூட தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிட்னி விமான நிலையத்தில் சந்தோஷ் நாராயணன் அவமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அவர். “நான் தோராயமாக எட்டு முறைக்குமேல் சாண்டி ஏர்போர்ட்டில் ரசாயன சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பேன். இன ரீதியாக நடத்தப்படும் சோதனையை சாண்டி ஏர்போர்ட் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.