\
கேங்ஸ்டர் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்

கேங்ஸ்டர் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்

கேங்ஸ்டர் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்
Published on

இயக்குனர் பிரியதர்ஷனும் நடிகை லிசியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும் சித்தார்த்
 என்ற மகனும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக பிரியதர்ஷனும் லிசியும் விவாகரத்து பெற்றுள்ளனர். அமெரிக்கா வில் படித்துள்ள கல்யாணி, விக்ரம், நயன்தாரா ஜோடியாக நடித்த ’இருமுகன்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி னார். ஹிர்த்திக் ரோஷனின் ’கிருஷ் 3’ படத்துக்கு புரொடக்‌ஷன் டிசைனராகவும் இருந்த இவர், கடந்த ஆண்டு, நாகார்ஜூனா வின் இளைய மகன் அகில் ஜோடியாக ’ஹலோ’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதை விக்ரம் குமார் இயக்கினார். இப்போது சர்வானந்த், சாய் தரம் தேஜ் ஜோடியாக இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க இருக்கிறார்.

(ஹலோ தெலுங்கு படத்தில், அகிலுடன் கல்யாணி)

இதுபற்றி அவர் கூறும்போது, ‘கேமராவுக்கு பின்னால் நிற்பதைத்தான் விரும்பினேன். அதுதான் எனக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஹீரோயினாக கேமராவுக்கு முன் வந்துவிட்டேன். சினிமா குடும்பம் என்பதால் எனக்கு பிரச் னை ஏதும் இல்லை. ஆனால், நான் நடிக்கப் போகிறேன் என்பதை என் குடும்பத்தினர் முதலில் நம்பவில்லை. நடிக்க வந்ததில் அப்பாவுக்கு நிம்மதி. என் நடிப்பை வீட்டில் விமர்சிப்பது உண்டு. சாய் தரம் தேஜுடன் நடிக்கும் படத்தை கிஷோர் திருமலா இயக்குகிறார். இந்தப் படத்தின் கேரக்டர் எனக்குப் பிடித்தமானது. சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் படத்தை சுதிர் வர்மா இயக்குகிறார். இது பீரியட் படம். கேங்ஸ்டர் கதை. 80 மற்றும் 90 களில் கதை நடக்கிறது. அந்த காலகட்டத்தைப் போல உடையணிந்து நடித்துள்ளேன். இதில் என் கேரக்டர் மறக்க முடியாததாக இருக்கும்’ என்றார்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com