தான் திமுக ஆதரவாளன் என்று நடிகர் கருணாகரன் கூறியுள்ளார்.
சூது கவ்வும், யாமிருக்க பயமே, ஜிகிர்தண்டா, ஆடாம ஜெயிச்சோமடா போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் கருணாகரன். இவரது இயல்பான நடிப்பு வெகுவாக கவரப்பட்டது. அதனால் தான் விரைவில் ஹீரோவாக கூட நடித்துவிட்டார்.
கருணாகரன் திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முக நாதனின் நெருங்கிய உறவினர். கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக குறித்து பல்வேறு செய்திகளை பகிர்வது வழக்கம்.
இந்நிலையில், திமுகவை ஆதரிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாகரன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டில், “நான் திமுகவை ஆதரிப்பதாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அது சரி தான். நான் திமுக ஆதரவாளன் தான். மு.க.ஸ்டாலின் அடுத்த முதலமைச்சர் ஆக வேண்டுமென விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.