மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரமா? கவுண்டமணி மறுப்பு

மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரமா? கவுண்டமணி மறுப்பு

மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரமா? கவுண்டமணி மறுப்பு
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக வந்த தகவலை நடிகர் கவுண்டமணி மறுத்துள்ளார்.

ஆர்.கே.நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக கவுண்டமணியும் செந்திலும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாயின. 

இந்த தகவலை மறுத்துள்ள நடிகர் கவுண்டமணி, ’நான் எந்த கட்சியையும் சாராதவன்.  அரசியலிலும் இல்லாதவன். நான் எந்த கட்சியை ஆதரித்தும் பிரசாரம் செய்யவில்லை. என்னை கேட்காமல் அவதூறாக செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com