‘80 வயதானாலும் நடிப்பேன்.. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்’: எமி ஜாக்சன்

‘80 வயதானாலும் நடிப்பேன்.. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்’: எமி ஜாக்சன்
‘80 வயதானாலும் நடிப்பேன்.. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்’: எமி ஜாக்சன்

வெளிநாட்டிலிருந்து வந்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் எமி ஜாக்சன். இவர் தமிழில் மதராசப்பட்டிணம் படத்தின்மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

8 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார். அதை பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், ‘’இந்தியாவில் இருந்த நாட்களை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். என்னை நடிகையாகவும், தனிபட்ட முறையிலும் வளர்த்து ஆளாக்கிய இடம் இந்தியா. முதன்முதலில் மதராசபட்டினம் படத்தில் நடிகையாக அறிமுகமானேன்.

சுதந்திரமாகவும், அர்ப்பணிப்புடனும் வேலை செய்வது எப்படி என கற்றுக்கொண்டேன். மேலும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். திரையுலகில் கற்றுக்கொண்டதுதான் என் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் உதவியுள்ளது. நான் என் மனசாட்சி சொல்வதைக் கேட்டு நடப்பவள். நான் சினிமாவிற்கு வந்தபோது எந்த அனுபவமும் இல்லை. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்று நடிப்பேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. இயக்குநர் விஜய் ஒரு குருவாக இருந்து என்னை வழிநடத்தி உள்ளார்.

குடும்பத்தின் முக்கியத்துவம் கருதி சினிமாவிற்கு இப்போது வர வாய்ப்பில்லை. என்றாலும் நான் ஒரு நடிகையாக 80 வயது ஆனாலும் நடிப்பேன். நல்ல கதைகள் வர காத்திருக்கிறேன். மேலும் என்னுடைய மகன் இன்னும் சிறிது வளர்ந்து என்னுடன் வரவேண்டும். எனது கணவர் ஜார்ஜ் மற்றும் அம்மா எப்போதும் எனக்கு உதவியாக இருக்கின்றனர். நான் நடிக்கும்போது என் கணவர் மற்றும் குடும்பத்தினர் என்னுடன் வந்தால் நன்றாக இருக்கும்’’ என்கிறார் எமி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com