பாகுபலி 2ஐ நான் இன்னும் பார்க்கவில்லை : அமீர்கான்
பாகுபலி 2 படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்று அமீர்கான் கூறியுள்ளார்.
பாகுபலி, தங்கல் இரண்டுமே இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்த படங்கள். இரண்டையும் ஒப்பிட வேண்டாம் என பாலிவுட் நடிகர் அமீர்கான் கேட்டுக்கொண்டுள்ளார்.
சச்சினின் வாழ்க்கை வரலாறு படமான சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்க்க வந்த அவரிடம் பாகுபலி-2, தங்கல் பட வசூல் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் பாகுபலி -2 படத்தை இன்னும் பார்க்கவில்லை. பாகுபலி படம், வேறு தங்கல் படம் வேறு இரண்டையும் ஒப்பிட வேண்டாம். ஆனால், இரண்டு படங்களும் இந்திய சினிமாவுக்கு உலக அளவில் புகழ் பெற்றுக்கொடுத்த படங்கள். பாகுபலி-2 பட மேக்கிங் சிறப்பாக இருப்பதாக கேள்விப்பட்டேன். பாகுபலி இயக்குநர் ராஜமவுலி மற்றும் அரவது படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என அவர் தெரிவித்தார்.

